/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மறியலில் ஈடுபட்ட கம்யூ., கட்சியினர் கைது
/
மறியலில் ஈடுபட்ட கம்யூ., கட்சியினர் கைது
ADDED : ஆக 02, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். இந்திய கம்யூ.,மாவட்ட செயலாளர் மணிகண்டன், லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் சுப்புராம் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு போலீசார் மறியலில் ஈடுபட்ட 250 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.