
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கால கேரம் பயிற்சி முகாம் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளியில் ,கேரம் சங்க செயலாளர் ஆல்வின் செல்வகுமார் தலைமையில் நடந்தது. பொருளாளர் மருதமுத்து முன்னிலை வகித்தார். இணை செயலாளர் ஜெனிபர் செல்வகுமார், செயற்குழு உறுப்பினர் சசிபாலா பயிற்சி அளித்தனர். மே 7ல் துவங்கப்பட்ட இந்த பயிற்சி முகாமானது மே 22 வரை தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது.
பயிற்சியானது கேடட், சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் என நான்கு பிரிவுகளில் நடந்தன. நிறைவு விழாவில் ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கோமகள் பேசினார். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.

