sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அறிவுத்திறனுக்கு வழிவகுக்கும் கருத்தியல் பாடங்கள்

/

அறிவுத்திறனுக்கு வழிவகுக்கும் கருத்தியல் பாடங்கள்

அறிவுத்திறனுக்கு வழிவகுக்கும் கருத்தியல் பாடங்கள்

அறிவுத்திறனுக்கு வழிவகுக்கும் கருத்தியல் பாடங்கள்


ADDED : செப் 01, 2024 04:02 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு


தகவல் தொழில்நுட்பத்தால் நாள்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இம் மாற்றங்கள் கிராம மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மவுன்ட் சீயோன் இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஐ. சி. எஸ்.இ. ,பாடத்திட்டம் மூலம் பாடங்களை மனப்பாடமாக பயிற்றுவிக்காமல் கருத்தியல் சார்ந்து கற்றுத் தருகிறது. நாளைய நெருக்கடிகள் சவால்களை சமாளிக்கும் விதமாக கருத்தியல் மூலம் மாணவர்கள் தீர்வு காண வேண்டுமென்பது பள்ளியின் நோக்கமாகும்.

அதற்கேற்ப தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், இந்தி பாடங்களின் வரிசையில் நடந்த அறிவியல் கண்காட்சி பெற்றோர்களையும் காண்போரையும் வியக்க வைப்பதாக இருந்தது.

கண்காட்சியை தனியார் பள்ளிகளின் முதன்மை கல்வி அலுவலர் சந்தனகுமார் துவக்கி வைத்து மாணவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளித்து அவரை அசர வைத்து விட்டனர்.

மாணவர்களின் தெளிவான ஆங்கில உரையாடல் பெற்றோர்களுக்கு வியப்பை தந்தது. ராமநாதபுரம் செய்யது அம்மாள் டிரஸ்ட் உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா மாணவர்களுடையே கலந்துரையாடிய போது அவர்களது உரையாடல் திறனையும் ஆங்கில புலமையும் கண்டு வியந்தார். ஒவ்வொரு பாடத்திற்கும் கே. ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை தங்களது திறமைக்கேற்ப வெவ்வேறு விதமான படைப்புகளை உருவாக்கி அதை விளக்கிய விதமும் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தது.

கண்காட்சி முடிந்து திரும்புவோரை இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தில் மாணவர்கள் பழ விதைகளை கொடுத்து விதைப்பதற்கு துாண்டினர்.

பெருமையாக உள்ளது


சாத்விகா, 5ம் வகுப்பு: பாடங்களை தாண்டி யோசிக்கும் திறனை வளர்ப்பதற்காக பள்ளியில் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றது எங்களுக்கு பெருமையாக உள்ளது. கான்செப்ட் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படுவதால் அறிவியல் கண்காட்சி மேலும் வலுவூட்டுவதாக உள்ளது.

திறன் சார்ந்த கலை நோக்கு


சூர்ஜன், 5ம் வகுப்பு:கே. ஜி., வகுப்பில் இருந்து உரையாடல் மூலம் பாடங்களைப் படித்து வருவதால் கேள்விகளுக்கான பதிலை கூறுவது எங்களுக்கு எளிதாக இருந்தது. திறன் சார்ந்த கலை நோக்கத்துடன் பாடங்களை படிக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவியல் கண்காட்சியை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்.

இப்பள்ளியே உதாரணம்


எஸ்.பி. சித்ராதேவி, பெற்றோர், பட்டிவீரன்பட்டி: பல திறன்களை வளர்த்து உயர் கல்விக்கு நல்ல மாணவர்களை அனுப்ப முடியும் என்பதற்கு இப்பள்ளி ஒரு உதாரணம். இப்பள்ளியில் கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறன் வளர்ப்பு ஆற்றல் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அறிவுத்திறனோடு மாணவர்கள்


முகம்மது ஜியாத், பெற்றோர், வத்தலக்குண்டு: ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உயர்கல்வியில் நல்ல பல பாடங்களை எடுத்து படிப்பதற்கு வசதியாக அறிவு திறனோடு உள்ளனர். கிராமப்புறத்தில் இருந்து புத்தி கூர்மையுடன் மாணவர்கள் உயிர் கல்விக்கு செல்வது எங்களுக்கு பெருமை. மேலும் நகர்புற மாணவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப இப்பள்ளி மாணவர்கள் போட்டி போடுவது சுலபமாகவே உள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி


ஆத்தியப்பன், பள்ளி முதல்வர்: கிராம மாணவர்களும் நகர்புற மாணவர்களுக்கு இணையாக ஆங்கில அறிவு பெற வேண்டும். அதற்காகவே ஐ.சி.எஸ்.இ. ,பாடத்திட்ட முறையை எங்கள் பள்ளிக்கு கொண்டு வந்தோம். திறன் சார்ந்து கருத்தியல் சார்ந்து பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்களை பயிற்றுவித்துள்ளோம். டெல்லி, சென்னை, மதுரை பகுதியில் இருந்து முக்கியமான கருத்தியலாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அதன் விளைவாகவே மாணவர்கள் நல்ல அறிவுத்திறன், ஒழுக்கத்துடன் பள்ளி சிறப்போடு விளங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

ஒழுக்கமே தலையாய செல்வம்


நோரிஸ் நடராஜன், லின்னி, பள்ளி தாளாளர்கள்:கிராமப்புறத்தில் ஐ.சி.எஸ். இ., பாடத்திட்டம் உருவாவதற்கு பெற்றோர்களே உறுதுணையாக இருந்தனர். அவர்களின் வழிகாட்டுதலே எங்களது முயற்சிக்கு வழிகாட்டுதலாக இருந்தது. பெற்றோர் காட்டிய ஆர்வம் மேலும் மாணவர்களுக்கு அறிவுத்திறனை ஊட்டுவதற்கு வாய்ப்பை கொடுத்துள்ளது. ஒழுக்கம் ஒன்று மட்டுமே தலையாய செல்வமாகும்.






      Dinamalar
      Follow us