/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாயை கட்டுப்படுத்த நாயுடன் வந்து காங்., மனு
/
நாயை கட்டுப்படுத்த நாயுடன் வந்து காங்., மனு
ADDED : ஜூலை 26, 2024 12:31 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி காங்.,நிர்வாகிகள் கையில் நாயுடன் வந்து கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல் மாநகர காங்.,மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனிடம் கொடுத்த மனுவில்,திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளன.
இவைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் சுற்றுபவர்களை கடிக்கின்றன.
இதனால் பல தரப்பு மக்களும் பாதிக்கின்றனர். தெரு நாய்களால் மக்கள் வெளியில் நடமாடுவதற்கே அச்சப்படுகின்றனர். இதைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார் . மனுவை கொடுக்க வந்த காங்.,நிர்வாகிகள் ரோட்டோரத்தில் சுற்றித்திரிந்த தெருநாய் குட்டி ஒன்றை கையில் பிடித்தப்படி வந்தனர்.