/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே ஸ்டேஷனில் காங்., முற்றுகை
/
ரயில்வே ஸ்டேஷனில் காங்., முற்றுகை
ADDED : ஜூன் 19, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், ; மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்துக்கு முழு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக கோரி திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனை காங்கிரசார் முற்றுகையிட்டனர்.
மாவட்ட மாநகர தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார்.துணைத் தலைவர்கள் காஜா மைதீன், அபுதாஹீர், முருகேஷன், வேங்கைராஜா முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்சவள்ளி கவுன்சிலர் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.