/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சந்திப்பில் நிற்கும் பஸ்களால் நெரிசல்; பழநி நகராட்சி 11 வது வார்டில் தொடரும் அவதி
/
சந்திப்பில் நிற்கும் பஸ்களால் நெரிசல்; பழநி நகராட்சி 11 வது வார்டில் தொடரும் அவதி
சந்திப்பில் நிற்கும் பஸ்களால் நெரிசல்; பழநி நகராட்சி 11 வது வார்டில் தொடரும் அவதி
சந்திப்பில் நிற்கும் பஸ்களால் நெரிசல்; பழநி நகராட்சி 11 வது வார்டில் தொடரும் அவதி
ADDED : ஆக 30, 2024 05:50 AM

பழநி : பழநி நகராட்சி 11 வது வார்டில் சந்திப்பில் நிற்கும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பாதிக்கின்றனர்.
ஆர்.சி.தெரசம்மாள் தெரு, தாடகை அம்மன் கோயில் தெரு, ராஜகோபால் பூங்கா தெரு, ஆர்.சி. பள்ளி தெரு, மதுரைவீரன் வீரன் கோயில்தெரு, பொன்காளியம்மன் கோயில் தெரு, கமிட்டி சுந்தரம் தெரு,தேவேந்தர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு குறுகிய சந்து, சாலைகளை உடையது. இப்பகுதியில் போர்வெல் பழுதாகி உள்ளது . நாய் தொல்லையும் மிக அதிகம் உள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். மழை காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் வரும் வகையில் சாக்கடை கட்டமைப்பு சாலைகளில் உள்ளது.
பஸ்களால் நெரிசல்
தங்கவேல், கூலி தொழிலாளி, தெரசம்மாள் காலனி : எங்கள் பகுதியில் போர்வெல் அமைத்து உப்புத் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய தாராபுரம் ரோடு சுப்பிரமணியபுரம் ரோடு சந்திப்பு உள்ளது.இச் சந்திப்பில் நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
முதியவர்கள் பாதிப்பு
மணிகண்டன், தனியார் தொழிலாளி, வெங்கட்ராமன் சந்து: வெங்கட்ராமன் சந்தில் பல ஆண்டுகளாக ரோடு போடப்படாமல் உள்ளது .இதனால் வாகனங்களில் செல்வோர் சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர். முதியவர்கள் பாதிப்பு அடைகின்றனர். ரோடை விரைவில் அமைத்து தர வேண்டும்.
தேவை கண்காணிப்பு கேமரா
கவுசல்யா குடும்பத் தலைவி, பெரிய கடை வீதி: அனைத்து தெருக்களிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இதனால் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சிறு குழந்தைகளை கடித்து விடுகிறது. பெரியவர்கள் கூட பயந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டாம்.
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
பாசமலர், கவுன்சிலர், (தி.மு.க.,): தெரு நாய்களை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வார்டில் சேதமான சாக்கடைகளை புதுப்பிக்க கோரிக்கை வைத்துள்ளேன். சாக்கடையை துார்வாரவும் அடிக்கடி நடவடிக்கை எடுத்து வருகிறேன். கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க போலீசாரிடம் கோரிக்கை விடுக்கப்படும். முக்கிய சாலைகளில் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.