/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லெக்கையன்கோட்டை- மூலச்சத்திரம் இடையே தொடரும் நெரிசல்
/
லெக்கையன்கோட்டை- மூலச்சத்திரம் இடையே தொடரும் நெரிசல்
லெக்கையன்கோட்டை- மூலச்சத்திரம் இடையே தொடரும் நெரிசல்
லெக்கையன்கோட்டை- மூலச்சத்திரம் இடையே தொடரும் நெரிசல்
ADDED : மே 27, 2024 06:11 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன்கோட்டை மூலச்சத்திரம் இடையே ரோடு பணிகள் நடப்பதால் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர்.
ஒட்டன்சத்திரம் மெட்டூர் நான்கு வழிச்சாலை பணிகளின் ஒரு பகுதியாக லெக்கையன்கோட்டை மூலச்சத்திரம் இடையே பாலம் கட்டுதல், ரோடு அமைக்கும் பணிகள் நடக்கிறது.
வாகனங்கள் செல்ல ரோடு அகலமின்றி ஒருவழிப்பாதையாக மிகவும் குறுகலாக உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் இந்த இடத்தை கடந்து செல்ல கால தாமதம் ஏற்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்தபடி ரோட்டை கடந்து செல்கின்றன. நேற்று ஞாயிறு விடுமுறை தினம்,முகூர்த்த தினம் என்பதால் அதிகப்படியான வாகனங்கள் இந்த ரோட்டை கடந்து சென்றது. லெக்கையன்கோட்டை மூலச்சத்திரம் இடையே உள்ள துாரம் சுமார் 2 கிலோ மீட்டர். ஆனால் இந்த துாரத்தை கடந்து செல்ல வாகனங்களுக்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகியது. ரோடு பணிகள் முடியும் வரை கனரக வாகனங்களை ஒட்டன்சத்திரம், கேதையுறும்பு, செம்மடைப்பட்டி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

