/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மர்மநபர்கள் மிரட்டல்
/
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மர்மநபர்கள் மிரட்டல்
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மர்மநபர்கள் மிரட்டல்
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மர்மநபர்கள் மிரட்டல்
ADDED : பிப் 24, 2025 02:47 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சிசி 'டிவி' கேமராக்கள் அமைத்து கொடுத்த காங்., கவுன்சிலர் கார்த்திக்கிற்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால் பாதுகாப்பு கோரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி நாகல்நகர் பெர்பார்க் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக் 38. இவர் 21 வது வார்டு காங்., கவுன்சிலராக உள்ளார். 21 வது வார்டிலுள்ள பஸ் ஸ்டாண்ட், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக குற்ற செயல்கள் நடக்கிறது.
இதைத்தடுக்கும் விதம் கார்த்திக் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 21 வது வார்டு முழுவதும் 110 சிசி டிவி கேமராக்களை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதியின் பேரில் அமைத்து கொடுத்தார். இதனால் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் லாட்டரி விற்பனை, சட்ட விரோத மது விற்பனை, திருட்டுகள் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சிக்கல் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கார்த்திக் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளனர்.
இதனால் கவுன்சிலர் தனக்கு பாதுகாப்பு வேண்டி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
கார்த்திக் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் என் வார்டில் உள்ளது. அங்கு தினமும் ஏராளமான குற்ற செயல்கள் நடக்கின்றன.
வெளியூர் பயணிகளும் உடமைகளை பறிகொடுத்து தவிக்கின்றனர். மற்ற பகுதிகளிலும் பெண்களிடம் வழிப்பறி நடக்கின்றன. மேலும் பல விரும்ப தகாத செயல்களும் நடக்கின்றன.
இதைத்தடுக்க சொந்த முயற்சியில் சிசி டிவி கேமராக்களை அமைத்து கொடுத்தேன். இதனால் சிலர் மிரட்டுகின்றனர். போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

