/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீரானது பாதாள சாக்கடை கழிவு நீர் கசிவு
/
சீரானது பாதாள சாக்கடை கழிவு நீர் கசிவு
ADDED : ஜூன் 22, 2024 06:04 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் சீடிஸ்கேன் மையம் அருகே பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியே சென்ற நிலையில் அவ் வழியாக செல்லும் மக்கள் நடமாட முடியாமல் தவித்தனர்.
கழிவுநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தியும் ஜோராக நடக்க தொற்று பரப்பும் அபாயமும் ஏற்பட்டது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் திண்டுக்கல் மாநகராட்சியோடு இணைந்து பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைத்து கழிவுநீர் வெளியில் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் தேங்கிய இடத்தில் சுத்தம் செய்து கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.