/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பகலில் கட்டட தொழில் இரவில் டூவீலர் திருட்டு
/
பகலில் கட்டட தொழில் இரவில் டூவீலர் திருட்டு
ADDED : ஜூன் 06, 2024 04:11 AM
வத்தலக்குண்டு ; பகலில் கட்டட தொழில் செய்து வருவதோடு இரவில் டூவீலர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த தேனி மாவட்டம் பொம்மனம்பட்டியை சேர்ந்த மாடசாமியை 44 , போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டு பகுதியில் சில வாரங்களாக டூவீலர்கள் திருடு போயின. குற்றப்பிரிவு எஸ்.ஐ., செந்தில்குமார் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து டுவீலர் திருடர்களை தேடி வந்தனர்.
சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் தேனி மாவட்டம் பொம்மனம்பட்டியை சேர்ந்த மாடசாமியை 44 , கைது செய்தனர்.
விசாரணையில் பகலில் கட்டட தொழிலுக்கு செல்லும் இடங்களில் நோட்டமிட்டு இரவில் அப்பகுதியில் டூவீலர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இவரிடமிருந்து 8 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.