/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை
/
வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை
வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை
வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை
ADDED : மார் 02, 2025 05:10 AM
பழநி: பழநி வனப்பகுதிக்கு அருகே உள்ள பெரியம்மாபட்டி, அய்யம்பள்ளி, புளியம்பட்டி, சண்முகம் பாறை, பாலாறு, பொருந்தல் பகுதிகளில் யானை நடமாடத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதி அருகே பெரிய அம்மாபட்டி, அய்யம்பள்ளி, கிராமங்களுக்கு உட்பட்ட புளியம்பட்டி, சண்முகம் பாறை, பாலாறு, பொருந்தலாறு பகுதி விளை நிலங்களில் மா, தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதி வரும் காட்டு யானைகள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதம் செய்கிறது. வனத்துறை சார்பில் அகழிகள் , தொங்கும் சோலார்வேலிகள் , கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதோடு பழநி காரமடை பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இதன் மூலம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் கண்காணித்து அவசர நேரங்களில் உடனடி நடவடிக்கை குழுவின் மூலம் யானைகளை வனப் பகுதிக்குள் திருப்பி அனுப்பும் நடைமுறைகளை கையாள கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் வனவிலங்குகள் தொல்லையின்றி தப்பிக்க வாய்ப்பு ஏற்படும் என வனத்துறை என தெரிவித்துள்ளனர்.