/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒருவழிப்பாதையாகும் கான்வென்ட் ரோடு
/
ஒருவழிப்பாதையாகும் கான்வென்ட் ரோடு
ADDED : ஜூலை 12, 2024 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முக்கிய சாலைகள் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை , மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
கான்வென்ட் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. பழநி போலீசார் நேற்று முதல் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை கான்வென்ட் ரோடு பகுதியை ஒரு வழி பாதையாக மாற்றி சோதனை முயற்சியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் குறையும் நிலையில் ஒரு வழிப்பாதை பின்பற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.