/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் சமையல் மாஸ்டர் கொலை
/
ஒட்டன்சத்திரத்தில் சமையல் மாஸ்டர் கொலை
ADDED : மார் 11, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் திண்டுக்கல்லை சேர்ந்த சமையல் மாஸ்டர் கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்தவர் பாலாஜி 39. சமையல் மாஸ்டராக உள்ளார்.நேற்று முன்தினம் நள்ளிரவு ஒட்டன்சத்திரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பயணிகள் நிற்கும் பகுதியில் தலையில் காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அருகில் செங்கற்கள் இருந்தது. கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர். திண்டுக்கல் எஸ்.பி., நேரில் விசாரணை நடத்தினார்.

