/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீயில் எரிந்த மக்காச்சோளப் பயிர்கள்
/
தீயில் எரிந்த மக்காச்சோளப் பயிர்கள்
ADDED : மார் 06, 2025 03:54 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 60 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.
பதினாறுபுதுார், பெரியகோட்டை, ரெட்டியபட்டி பகுதியில் உள்ள காடுகளில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இதனால் 60 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் தீயில் சாம்பலாகின. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து மக்காச்சோளம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தீப்பற்றி எரிந்ததால் பயிரிட்ட விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.