/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பேரூராட்சிகளில் கவுன்சில் கூட்டம்
/
பேரூராட்சிகளில் கவுன்சில் கூட்டம்
ADDED : செப் 02, 2024 12:25 AM
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பிரதீபா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆனந்தி (தி.மு.க.,) செயல் அலுவலர் இளவரசி முன்னிலை வகித்தனர். தெருவிளக்கு கொள்முதல் பிரச்னை, வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், சுகாதார பராமரிப்பில் தொய்வு குறித்து கவுன்சிலர்கள் புகார் எழுப்பினர். செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கன்னிவாடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணை தலைவர் கீதா, பொறுப்பு செயல் அலுவலர் ஜெயமாலு முன்னிலை வகித்தனர்.
தரமற்ற ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கீட்டிற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடிநீர் வழங்கல், சுகாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அலட்சியம் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.