/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடன் தொல்லையால் விஷம் குடித்த தம்பதி; கணவர் பலி
/
கடன் தொல்லையால் விஷம் குடித்த தம்பதி; கணவர் பலி
ADDED : மார் 02, 2025 05:03 AM
வேடசந்துார்: வேடசந்துார் அருகே கடன் தொல்லையால் தம்பதி விஷம் குடித்த நிலையில் கணவர் இறந்தார்.
மதுரை உசிலம்பட்டி திருப்பாலையை சேர்ந்தவர் கண்ணன் 65. ஓய்வு அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி மீனாட்சி 60. இருவரும் வேடசந்துார் அருகே தம்மனம்பட்டியில் உள்ள லாரி செட்டில் தங்கி வந்தனர். இவர்களது இரண்டு மகன்களும் திருமணம் ஆகி மதுரை உசிலம்பட்டியில் வசித்து வருகின்றனர்.
இருவருக்கும் கடன் பிரச்னை இருந்த நிலையில் திருச்செந்துார் கோயில் சென்று வருவதாக கூறிவிட்டு லட்சுமணன்பட்டி பஸ் ஸ்டாப் வந்தனர். அங்கு விஷம் சாப்பிட்டு மயங்கி கிடந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கண்ணன் இறந்தார். மீனாட்சி சிகிச்சையில் உள்ளார். வேடசந்துார் எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரிக்கிறார்.