/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள்
/
எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள்
ADDED : மே 19, 2024 06:37 AM
கீரனுார் : பழநி கோரிக்கடவு அருகே கோயில் அம்மாபட்டி சுடுகாட்டில் எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் கிடந்தன.சந்தேகமடைந்த ஊர் மக்கள் போலீசில் புகாரளிக்க விசாரிக்கின்றனர்.
பழநி கோரிக்கடவு அருகே கோயில் அம்மாபட்டி கிராம சுடுகாட்டில் மனித உடல் எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் கிடந்தன. சந்தேகமடைந்த ஊர் மக்கள், சில நாட்களாக யாரும் உயிரிழக்கவில்லை.
சுடுகாட்டில் பெரும்பாலானோர் உடலை புதைத்துதான் வருவதாக கீரனுார் போலீசில் தகவல் அளித்தனர்.
அதன்படி போலீசார் எலும்பு துண்டுகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். வெளியூர் நபர்கள் இங்கு உடலை எரித்து சென்றார்களா, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர்.

