/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்; லெவன் ஸ்டார் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்; லெவன் ஸ்டார் அணி வெற்றி
ADDED : மே 03, 2024 06:32 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக்- டி.டி.சி.ஏ.கிரிக்கெட் லீக் போட்டியில் லெவன்ஸ்டார் அணி வெற்றி பெற்றது.திண்டுக்கல் என்.பி.ஆர். டர்ப் மைதானத்தில் நடந்த டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் சி.சி.அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 274ரன்கள் எடுத்தது. முகேஷ்வரன் 88, லட்சுமி நாராயணன் 32,ஷேக் பரீத் 35, சரவணன் 38 (நாட்அவுட்)ரன்கள், அருண்குமார் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர். சி.சி.அணி 37.1 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
மாணிக்கராஜ் 25ரன்கள், மணிகண்டன். அஜித்மணி தலா 3 விக்கெட் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல்
ஏ.எம்.சி.சி. அணி 42 ஓவரில் 9 விக்கெட் இழந்து 228ரன்கள் எடுத்தது. தினேஷ்குமார் 51, முத்துகாமாட்சி 39, சாதிக் அலி 39ரன்கள், பிரதீப் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த பழநி யுவராஜ் சி.சி. அணி 28.4ஓவரில் 176 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. பிரதீப் 45, வீரமலை 29, பிரதீஷ்குமார் 26ரன்கள், முத்துகாமாட்சி, ராஜபாண்டி தலா 4 விக்கெட் எடுத்தனர்.
ஸ்ரீ.வீ.மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல் ஸ்ரீ வசந்தா ஸ்வீட்ஸ் சி.சி. அணி 45.5 ஓவரில் 224 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
ராஜேஷ் 54, கார்த்திகேயன் 45, ஸ்ரீலோகேஷ் 25ரன்கள், இளையராஜா 7 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹிர் சி.சி.அணி 36.4 ஓவரில் 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. இளையராஜா 25, மதன்குமார் 27, முருகானந்தம் 74 ரன்கள் எடுத்தனர்.
ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த ஸ்ரீ பாலாஜிபவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக்போட்டியில் கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சி.சி.அணி 18 ஓவரில் 103 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
மணிகண்டபிரபு 31ரன்கள், சந்திரசேகர் 6 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் லெவன் ஸ்டார் சி.சி. அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் மட்டுமே இழந்து 106ரன்கள் எடுத்து வென்றது.
ஆனந்தகுமார் 32 (நாட்அவுட்)ரன்கள், தினேஷ் கார்த்திக் 5 விக்கெட் எடுத்தனர்.
ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த ஸ்ரீ பாலாஜிபவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல் சச்சின் சி.சி.அணி 22.1 ஓவரில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
முத்து கண்ணன் 28ரன்கள், முத்து 5 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் நல்லாம்பட்டி யங்ஸ்டார் சி.சி. அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 112ரன்கள் எடுத்து வென்றது. அருண்குமார் 40ரன்கள் எடுத்தார்.