/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: ஆரஞ்ச் சர்ட்ஸ் சி.சி. அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: ஆரஞ்ச் சர்ட்ஸ் சி.சி. அணி வெற்றி
ADDED : மே 28, 2024 05:16 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான டேக் டி.டி.சி.ஏ.2வது டிவிஷன் சூப்பர் லீக் போட்டிகளில் ஆடிய ஆரஞ்ச் சர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி மூன்று வெற்றிகளில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் பிரசித்தி வித்யோதயா கோப்பையை வென்றது.
ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் சூப்பர் லீக் போட்டியில் ஆடிய ஒட்டன்சத்திரம் நைக் சி.சி. அணி 25.5 ஓவரில் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. தர்ஷன் யோகலிங்கம் 25ரன்கள், கோபிநாத் 3 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்ததிண்டுக்கல் ஆரஞ்ச் ஷர்ட்ஸ் சி.சி. அணி 17.1 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 108ரன்கள் எடுத்து வென்றது. அருள் வசந்தகுமார் 419(நாட்அவுட்), பனுவல்லட்டி 37(நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர்.
என்.பி.ஆர். புல்வெளி மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் சூப்பர் லீக் போட்டியில் திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் சி.சி. அணி 50 ஓவரில் 6விக்கெட் இழந்து 273ரன்கள் எடுத்தது.
சஞ்சய் பாலாஜி 50(நாட்அவுட்), முகமது யூசுப் 29, ஸ்ரீமுகேஷ்வரன் 83 (நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 49.4 ஓவரில் 260 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
சிவமுருகன் 44, ஆஷிக் 25, ஜெயந்த் 44, கார்த்திக் சரண் 27, ராம் திலக் 34ரன்கள், மாதேஷ்வரன் 3 விக்கெட் எடுத்தனர். ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் சூப்பர் லீக் போட்டியில் ஆடிய
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 25 ஓவரில் 2 விக்கெட் இழந்து 211ரன்கள் எடுத்தது. அன்புபாண்டியன் 104, பாணபாண்டி 50 (நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல்வெற்றி சி.சி. அணி 24.3 ஓவரில் 8 விக்கெட் இழந்து 212ரன்கள் எடுத்து வென்றது.
அரோமியன்ராஜ் 66 (நாட்அவுட்), கார்த்திக் குமார் 30, பெரியசாமி 26, லோகு 27ரன்கள், அருண்குமார் 3 விக்கெட் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஹோட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக். போட்டியில் நல்லம்பட்டி யங்ஸ்டார் சி.சி. அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 155ரன்கள் எடுத்தது.
கோவிந்தராஜ் 32, வரதராஜன் 34ரன்கள், ஸ்ரீஹரி 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் லெவன் ஸ்டார் சி.சி.அணி 23.5 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
ராஜேஷ் கண்ணன் 32, இளங்கோ, முத்து தலா 3 விக்கெட் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஹோட்டல் ஸ்ரீ பாலாஜிபவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில்திண்டுக்கல்மெஜஸ்டிக் சி.சி.அணி 25 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 163ரன்கள் எடுத்தது. சுரேஷ்பாபு 85 ரன்கள், ஜெய்விக்னேஷ் 4 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 25 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 150ரன்கள் எடுத்தது. மணிகண்டபிரபு 38, தினேஷ்கார்த்திக் 38, ஜெய்விக்னேஷ் 33(நாட்அவுட்) ரன்கள், கன்வால்கிஷோர் 3 விக்கெட் ஹாட்ரிக் முறையில் எடுத்து சாதனை புரிந்தார்.
பி.எஸ்.என்.ஏ.கல்லுாரி மைதானத்தில் நடந்த ஹோட்டல் ஸ்ரீ பாலாஜிபவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில்திண்டுக்கல் நல்லம்பட்டி யங்ஸ்டார் சி.சி. அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 178ரன்கள் எடுத்தது.
அருண்குமார் 37, மாதேஷ் 56, திருப்பதி 36ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த கொடைக்கானல் லெவன் அணி 19.1 ஓவரில் 94 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. திருப்பதி 4, மாதேஷ் 3 விக்கெட் எடுத்தனர்.
2வது டிவிஷன் சூப்பர் லீக் போட்டிகளில் ஆடிய ஆரஞ்ச் சர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி மூன்று வெற்றிகளில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் பிரசித்தி வித்யோதயா கோப்பையை வென்றது.
ஒட்டன்சத்திரம் நைக் கிரிக்கெட் கிளப் அணி 2 வெற்றிகளின் மூலம் 8 புள்ளிகள் பெற்று 2ம் இடம் பிடித்தது.
திண்டுக்கல் வெற்றி சி.சி.அணி 3 புள்ளிகள் பெற்று 3ம் இடமும், திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.ஸ்போர்ட்ஸ் கிளப் அணி ஆடிய மூன்று போட்டிகளில் புள்ளிகள் எதுவும் பெறாமலும் ஆட்டத்தை முடித்தன.