/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: ராயல் சி.சி., அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: ராயல் சி.சி., அணி வெற்றி
ADDED : மார் 22, 2024 05:11 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கொடைக்கானல் பவான்ஸ் பள்ளியில் நடந்த பவான்ஸ்கோப்பையின் கொடைக்கானல் அணிகளுக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் ராயல் சி.சி., சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
என்.பி.ஆர்.டர்ப் மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் ஆடிய பெஸ்ட் லெவன்ஸ் சி.சி. அணி 18.3 ஓவரில் 81ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
சிபிதர்சன், ஹரிஷ் தலா 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 15.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 85ரன்கள் எடுத்து வென்றது. அருண்குமார் 59(நாட்அவுட்)ரன்கள், ஜூசி பீட்டர் 3 விக்கெட் எடுத்தனர்.  அரையிறுதி 2ம் போட்டியில் ஆடிய ராயல் சி.சி. அணி 25 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 219ரன்கள் எடுத்தது. யுவராஜா 151(நாட்அவுட்), பிரதீப் 56 (நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த கிரவுண்ட் பிரண்ட்ஸ் சி.சி., அணி 20.4 ஓவரில் 128 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. சுரேஷ் 4 விக்கெட் எடுத்தார்.
இறுதி போட்டியில் ஆடியராயல் சி.சி. அணி 29.3 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. யுவராஜா 32, பிரேம்சிங் 42ரன்கள், ராம்குமார் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 22.1 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. பாக்யராஜ் 52ரன்கள், பிரதீப் 6 விக்கெட் எடுத்தனர்.

