/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் போட்டி: பிரசித்தி வித்யோதயா வெற்றி
/
கிரிக்கெட் போட்டி: பிரசித்தி வித்யோதயா வெற்றி
ADDED : ஆக 19, 2024 01:09 AM
திண்டுக்கல்: மாவட்ட அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்குகிடையேயான கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் பிரசித்தி வித்யோதயா அணி வெற்றி பெற்றது.
பிரசித்தி வித்யோதயா பள்ளி நடத்தும் மாவட்ட அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்குகிடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது.
இதற்கான அரையிறுதி போட்டி ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நடந்தது. முதல் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் புனித ஜான்பால் அகாடமி அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்களில் சுருண்டது. ஹேமந்த் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
சேசிங் செய்த பிரசித்தி வித்யோதயா அணி 7.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 36 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
2வது அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா வித்யா மந்திர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த திண்டுக்கல் மகரிஷி வித்யா மந்திர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 98 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது யாசன் 29 ரன்கள் எடுத்தார்.
இறுதிப்போட்டியில் திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா பள்ளி அணியும், ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா வித்யா மந்திர் அணியும் மோதுகின்றன. இறுதிப் போட்டி மழையின் காரணமாக வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

