/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் கிரிக்கெட் போட்டிகள்
/
திண்டுக்கல்லில் கிரிக்கெட் போட்டிகள்
ADDED : ஆக 18, 2024 05:12 AM
திண்டுக்கல் : பிரசித்தி வித்யோதயா பள்ளி நடத்தும் மாவட்ட அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்குகிடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல் புனித ஜான்பால் அகாடமி அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. ஷர்வின் 131 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல் பார்வதீஸ் அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை பறிகொடுத்து 96 ரன்கள் எடுத்தது.
திண்டுக்கல் ஸ்ரீமகரிஷி வித்யா மந்திர் பள்ளி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ஹரி பிரித் 32, ேஹமன்த் 28, ஸ்ரீ ஹரிஹரன் 33 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த வித்யா பார்த்தி நேஷனல் அகாடமி அணி 10.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து 69 ரன்களில் சுருண்டது. அணியின் யுவன் சங்கர் 26 ரன்களும், ஆதித்யா 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தனர்.
திண்டுக்கல் எஸ்.எஸ். எம். அகாடமி அணி முதலில் பேட்டிங் செய்து 19:4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. அன்புச்செல்வன் 26 ரன்களும், தரணி 14 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா வித்யா மந்திர் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.