ADDED : மே 20, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வைகாசி மாத முதல் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு படையெடுத்தனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் தென் மாவட்டங்களுக்கு செல்லும் இணைப்பு பகுதியாக இருப்பதால் மதுரை, தேனி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பயணிகள் காத்திருந்தனர். அதோபோல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல லோக்கல் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
முகூர்த்ததினம் என்பதால் பழநிக்கும், விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலுக்கும் பொதுமக்கள் சென்று வந்த வண்ணம் இருந்தால் பஸ்களில் இடமில்லாமல் நின்று போகும் நிலை உருவானது.

