/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் ஐ.டி.ஊழியரிடம் டிரேடிங் மோசடி செய்த கடலூர் வாலிபர் கைது
/
திண்டுக்கல் ஐ.டி.ஊழியரிடம் டிரேடிங் மோசடி செய்த கடலூர் வாலிபர் கைது
திண்டுக்கல் ஐ.டி.ஊழியரிடம் டிரேடிங் மோசடி செய்த கடலூர் வாலிபர் கைது
திண்டுக்கல் ஐ.டி.ஊழியரிடம் டிரேடிங் மோசடி செய்த கடலூர் வாலிபர் கைது
ADDED : நவ 14, 2024 04:43 PM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஐ.டி.ஊழியரிடம் இன்ஸ்டாகிராமில் டிரேடிங் செய்வதாக கூறி ரூ.25 ஆயிரம் மோசடி செய்த கடலுார் கூலித்தொழிலாளியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஐ.டி.ஊழியர் ஆரோன்25. இவர் வீட்டிலிருந்தபடி சில மாதங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் 2024 ஆகஸ்டில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு டிரேடிங் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான குறுந்தகவல் வந்தது. இதை உண்மை என நம்பிய ஆரோன்,அதில் உள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அவர்கள் கேட்கும்
விபரங்களை தெரிவித்தார்.
எதிர்திசையில் பேசிய நபர் வாட்ஸ் அப்பில் ஆரோனை,தொடர்பு கொண்டு டிரேடிங் சம்பந்தமான சில தகவல்களை கூறி அவர் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த கூறினார். ஆரோனும் நம்பகத்தன்மையாக பேசியதால் ரூ.25ஆயிரத்தை அனுப்பினார். பணம் அனுப்பியதும் எதிர்திசையில் பேசிய மர்ம நபர் அவரது அலைபேசி எண்களை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆரோன்,தி்ணடுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
ஏ.டி.எஸ்.பி.,தெய்வம் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து பணமோசடியில் ஈடுபட்டது யார் என தேடியநிலையில்
ஆரோன்,பணம் அனுப்பிய வங்கி கணக்கு கடலுார் மாவட்டம் திட்டக்குடி பொன்னடம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிஆகாசுடையது,இந்த மோசடியில் ஈடுபட்டதும் இவர் தான் எனவும் தெரிந்தது. இன்ஸ்பெக்டர் விக்டோரியா,எஸ்.ஐ.,லாய்டுசிங் உள்ளிட்ட
போலீசார் நேற்று கடலுார் திட்டக்குடி பொன்னடத்தை சேர்ந்த ஆகாசை,கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணையைதுவக்கியுள்ளனர்.