ADDED : ஆக 16, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: தாண்டிக்குடி கே.சி.பட்டி வி.ஏ.ஓ.,அலுவலகம் சேதமான நிலையில் இருப்பதால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் எந்நேரமும் அச்சத்தில் உள்ளனர்.
ஆடலுார் செல்லும் மெயின் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் வி.ஏ.ஒ., அலுவலகம் கட்டமைக்கப்பட்டது. தற்போது கூரை சேதமடைந்தும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையும்,மழை நீர் உட்புகுந்து அலுவலக கோப்புகளை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு பணியாற்றும் அலுவலர்களும் அச்சப்படுகின்றனர். நாள்தோறும் பொதுமக்கள் வருவாய் துறை சம்பந்தமான விவரங்களுக்கு வருவதால் பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டு வாடகை கட்டடத்தில் அலுவலகம் செயல்படுகிறது. மாவட்ட வருவாய் துறை நிர்வாகம் கட்டடத்தை ஆய்வு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.