/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து...
/
சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து...
ADDED : ஆக 05, 2024 06:57 AM

சேதமான மின்கம்பம்
ஒட்டன்சத்திரம் தாலுகா கோம்பை கிராமம் 3 வது வார்டில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் அவ்வழியாக செல்வோர் அச்சத்துடனே செல்கின்றனர். புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணேஷ்,கே.அத்திக்கோம்பை.-------
ரோட்டோர மணலால் விபத்து
திண்டுக்கல்- பழநி ரோட்டில் மணல் மேவி உள்ளது. இதனால் காற்றடிக்கும் போது இவ்வழியில் செல்லும் வாகனஓட்டிகளின் கண்களில் மணல் பட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது. மணலை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணன், திண்டுக்கல்.------
குப்பையால் உருவாகும் சீர்கேடு
திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பைகள் சிதறி சுகாதாரக்கேடை ஏற்படுத்துகிறது. முறையாக குப்பை தொட்டி வைத்து தினந்தோறும் குப்பையை அகற்ற வேண்டும்.வேல்முருகன், திண்டுக்கல்.------
பயன்பாடில்லா குடிநீர் இயந்திரம்
கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக்கில் அமைக்கப்பட்ட கட்டண குடிநீர் இயந்திரம் செயல்படாமல் உள்ளது. இதனால் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குடிநீரின்றி அவதியடைகின்றனர். நகராட்சி குடிநீர் இயந்திரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ். சக்திவேல், கொடைக்காலை.-------
தாழ்வான மின்கம்பிகள்
ஓடைப்பட்டி ஊராட்சி சக்கம்பட்டி பழனிகவுண்டன் புதுார் அருந்ததியர் காலனியில் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் தாழ்வான மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும். கி.ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.-------
தொற்று பரப்பும் கழிவுநீர்
திண்டுக்கல் சாலை ரோட்டில் பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவுகிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திகேயன், நாகல்நகர்.-------
சேதமான கட்டடம்
ஆத்துார் ஒன்றியம் அய்யம்பாளையம் கால்நடை மருந்தக கட்டடம் சேதமடைந்துள்ளது. இதனால் இங்கு வரும் மக்கள் அச்சத்துடனே வருகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன் அய்யம்பாளையம்.
.......................