sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து....

/

சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து....

சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து....

சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து....


ADDED : மார் 12, 2025 06:27 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சுறுத்தும் மின்கம்பம் : திண்டுக்கல் அருகே எம்.எம். கோவிலுார் ரோட்டில் மின்கம்பம் சேதம் அடைந்து சிமெண்ட் பூச்சு கம்பி வெளியே தெரிவதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் மக்கள் பயப்படுகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.

--ராஜேஷ், எம்.எம்.கோயிலுார்.--------

தொற்று பரப்பும் கழிவுநீர் : குல்லலகுண்டு ஊராட்சி பொட்டிசெட்டிபட்டி அரண்மனை தெரு 1வது வார்டு வீதியில் கழிவு நீர் தேங்கி துர் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், குல்லலகுண்டு.

---------மாசுபடுத்தும் பாலீத்தீன் கழிவுகள் : ஆத்துார் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஊராட்சி மில்ஸ் காலனியில் திடக்கழிவு மேலாண்மையில் அலட்சியம் நீடிக்கிறது. ரோட்டோரங்களில் பாலித்தீன் கழிவுகளை குவித்து எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. --பெ.குழந்தைவேல்,பிள்ளையார்நத்தம்.

----------குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர் : வடமதுரை கெச்சானிபட்டி அருகில் ரோட்டின் கீழ் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து நீர் வெளியேறுவதால் பள்ளம் ஏற்பட்டு விபத்து ஆபத்தாக உள்ளது. சீரமைப்பு பணி செய்ய குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ----பாலமுரளி, வடமதுரை.

-------

ஆபத்தான பயணத்தால் அச்சம் : நத்தம் கோட்டையூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ்சின் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். விபரீதங்கள் நிகழும் முன் போக்குவரத்து, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரா, நத்தம்.-----

சேதமான பாதாள சாக்கடை மூடி : பழநி தலைமை தபால்நிலையம் முன் பகுதியில் நகராட்சியால் போடபட்ட பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை என்பதால் விபத்துக்கள் நடக்கிறது. இதை சரி செய்ய வேண்டும். -ஜின்னா, பழநி.----------

குப்பையால் உருவாகும் சீர்கேடு : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள செங்குளம் பகுதியில் ரோட்டோரங்களில் பிளாஸ்டிக் கலந்த குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

-அ.சந்திரசேகர், மாரம்பாடி.-----------






      Dinamalar
      Follow us