/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சரக்கு வாகன பயணத்தால் காத்திருக்கு ஆபத்து
/
சரக்கு வாகன பயணத்தால் காத்திருக்கு ஆபத்து
ADDED : மே 31, 2024 06:10 AM

தேங்கும் தண்ணீரால் அவதி
கொடைக்கானல் ஏரி சாலையில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், தாழ்வான ரோட்டில் தேங்கும் மழை நீரால் கொசுக்கள் அதிகரித்து சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதை சீர் செய்ய வேண்டும். கார்மேகம், கொடைக்கானல்.
...........-------
ரோடு பள்ளத்தால் விபரீதம்
வடமதுரை ஆண்டி மாநகர் அருகில் நான்கு வழிச்சாலையில் இருந்து வெள்ளபொம்மன்பட்டி ரோடு பிரியும் பகுதியில் கேபிள் பதிக்க ரோட்டை தோண்டியதால் பள்ளமாக இருப்பதால் டூவீலர் ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர் . - சக்திவேல், வடமதுரை.
................--------
சரக்கு வாகனத்தில் பயணம்
சாணார்பட்டி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்களில் அதிகப்படியான ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். போலீசார் , போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாண்டி, கோம்பைபட்டி.
..........--------சாக்கடையில் அடைப்பு
முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் ரோட்டில் சாக்கடை மண் மேவி கிடப்பதால் கழிவு நீர் ரோட்டில் செல்வதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. இதை துார்வாரி கழிவுநீர் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுமுகம் குழந்தை முள்ளிப்பாடி.
...........---------
துாக்கி எறியப்படும் குப்பை
நிலக்கோட்டை காமராஜர் நகரில் வீடுகளின் பின்புறம் குப்பையை துாக்கி எறிவதால் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது . குப்பையை அகற்றுவதோடு இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். --சினேகா பொன்வாலி, நிலக்கோட்டை.
................----------தொட்டி பணியில் தாமதம்
அம்பிளிக்கை ஆலய கவுண்டன்பட்டியில் மேல் நிலைத் தொட்டி அமைக்க பில்லர் கம்பிகள் நிறுத்தப்பட்ட நிலையில் பல நாட்களாகியும் காட்சி பொருளாக உள்ளது . சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கி.ரங்கசாமி, கம்பளி நாயக்கன்பட்டி.
.................----------ரோட்டில் செல்லும் கழிவு நீர்
ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானாவில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோட்டில் கழிவுநீர் செல்வதற்கு வசதி இல்லாததால் ரோட்டிலே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இங்கு சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கவேலு, ஒட்டன்சத்திரம்.---------