/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் முதல்வர் மனைவி தரிசனம்:சலேத் மாதா சர்ச்சிலும் பிரார்த்தனை

ADDED : மே 03, 2024 02:23 AM

கொடைக்கானல்:கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தோடு ஓய்வெடுக்கும் நிலையில் நேற்று குறிஞ்சி ஆண்டவர் கோயில், சலேத் மாதா சர்ச்களுக்கு முதல்வர் மனைவி துர்கா சென்றார்.
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முழுவதும் விடுதியிலே ஓய்வெடுத்தார். மாலை 4:00 மணி விமானத்தில் சென்னை செல்வதாக இருந்த நிலையில் அதுவும் திடீரென ரத்து செய்யப்பட்டது.
மேலும் சில தினங்கள் கொடைக்கானலிலே முதல்வர் ஓய்வெடுக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதல்வரின் மனைவி துர்கா நேற்று காலை 11:30 மணிக்கு கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வாசலில் கூடி இருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அங்கிருந்து சலேத்மாதா சர்ச் சென்று அங்கு நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
முதல்வர் நேற்று சென்னை திரும்புவதாக இருந்த நிலையில் உடன் வந்த ஒருவருக்கு விடுதியில் காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் முதல்வர் சென்னை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.