/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர் இறப்பு
/
மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர் இறப்பு
ADDED : செப் 02, 2024 07:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திருச்சியை சேர்ந்தவர் வில்சன். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவில் அலுவலக உதவியாளராக உள்ளார். திண்டுக்கல் சோலைக்கால் பகுதியில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்றும் வழக்கம் போல் வில்சன்,அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டார். மதியம் 4:00 மணிக்கு திடிரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வில்சன்,இறந்ததாக தெரிவித்தனர். வடக்கு போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் சக ஊழியரான வில்சன்,இறந்ததால் கவலையடைந்தனர்.