/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அணைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்
/
அணைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்
ADDED : மார் 29, 2024 06:14 AM

பழநி : பழநி பகுதி அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் இதன் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
பழநி பகுதியில் பாலாறு -பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு என மூன்று அணைகள் உள்ளன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாதால் நீர்வரத்தும் இல்லை.தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணையில் 41.47 அடி (65 ) நீர் இருப்பு இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 146 கனஅடியாக உள்ளது. வரதமாநதி அணையில் 42.06 அடி( 66.47 ) நீர் உள்ளது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 5 கனஅடியாக உள்ளது.
குதிரையாறு அணையில் 56.78 அடி (80 ) தண்ணீர் உள்ளது. தண்ணீர் வெளியேற்றம் 26 கன அடியாக உள்ளது. தற்போது அணைகளில் நீர்வரத்து இல்லாமல் தண்ணீர் அளவும் குறைந்து வருகிறது.

