ADDED : ஜூன் 28, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுார் குப்பாம்பட்டியில் அய்யனார் கிராம கோயில் வளாகத்தில் செல்வ விநாயகர் கோயில் பிரதிஷ்டை பெரு விழா நடந்தது.
தாடிக்கொம்பு பெருமாள் கோயில் அர்ச்சகர் அமுதன் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். சுற்றுப்பகுதி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாட்டினை குப்பாம்பட்டி ஊர் பொது மக்கள், அய்யனார் கிராம கோயில் பூஜாரிகள், ஓம் சக்தி இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
