ADDED : ஜூன் 28, 2026 09:32 PM
நத்தம்: நத்தம் கட்டடப் பொறியாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
தேனி மாவட்ட கட்டட பொறியாளர் சங்க மண்டல தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மண்டல நிர்வாகக்குழு உறுப்பினர் பாரதியார் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா, வழக்கறிஞர் ஜஹாங்கீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர். அதன்படி தலைவராக சேக் அப்துல்லாவும், துணைத் தலைவராக சுப்பிரமணியும், செயலாளராக மணிகண்ட பிரபுவும், பொருளாளராக பிரவினும், ஒருங்கிணைப்பாளராக வினோத்தும் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் சங்க முன்னாள் தலைவர்கள் பாண்டி, ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
