/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., நகராட்சி தலைவர் தலைமையில் ஹிந்து அறநிலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., நகராட்சி தலைவர் தலைமையில் ஹிந்து அறநிலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தி.மு.க., நகராட்சி தலைவர் தலைமையில் ஹிந்து அறநிலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தி.மு.க., நகராட்சி தலைவர் தலைமையில் ஹிந்து அறநிலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2024 06:11 AM

பழநி : பழநியில் தி.மு.க., அரசின் ஹிந்து அறநிலைத்துறையின் கோயில் நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க., நகராட்சி தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழநி முருகன் கோயில் அடிவாரம் கிரிவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி கோயில் நிர்வாகம் கிரி வீதியில் கம்பி வேலிகள் அமைத்தல், வாகனங்கள் அனுமதி மறுப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் , பழநி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அய்யம்புள்ளி ரோடு, சன்னதி வீதி ஆண்டவன் பூங்கா ரோடுகளுடன் கிரி வீதி சந்திக்கும் பகுதிகள் அடைப்பு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்காரணமாக ஆக்கிரமிப்பால் மறைக்கப்பட்ட விநாயகர் உள்ளிட்ட கோயில்கள் பளிச் என தென்படுகின்றன.
கிரிவீதியும் பளிச்சிட பக்தர்கள் எந்தவித தொந்தரவின்றி கிரிவலம் செல்கின்றனர். பக்தர்கள் வசதியாக கிரிவீதியில் கோயில் நிர்வாகம் சார்பில் இலவச பஸ் சேவையும் உள்ளதால் பக்தர்கள் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் மையத்திற்கும் எளிதாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க., வை சேர்ந்த நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையிலான கவுன்சிலர்கள், கிரிவிதி ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட தமிழக அரசின் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிர்வாக நடவடிக்கையை கண்டித்து கோயில் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதோடு அரசின் ஹிந்து அறநிலையத்துறை கோயில் நிர்வாகம் எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தி.மு.க., நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி கூறுகையில், கோயில் நிர்வாகம் நகராட்சிக்கு சொந்தமான 40 சென்ட் இடத்தை கோரி உள்ளது. இந்த இடம் சுகாதார நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் அதனை கையகப்படுத்த முயற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மா. கம்யூ.,வை சேர்ந்த துணைத் தலைவர் கந்தசாமி, தி.மு.க, அ.தி.மு.க., காங்., வி.சி.க., கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.