/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு: போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

ADDED : ஆக 31, 2024 06:07 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போலீஸ் ஸ்டேஷனை ஹிந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர் .
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும்.செப்.7 ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடக்கும் இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்கு செல்கின்றனர்.
இதனால் செப்.10 முதல் செப்.12 வரை விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க மறுத்த ஹிந்து முன்னணியினர் திட்டமிட்டப்படி விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும் என தெரிவித்த நிலையில், ஹிந்து மக்கள் கட்சியின் நிர்வாகி தர்மா, சிவசேனை அமைப்பின் நிர்வாகி பாலாஜி உள்ளிட்டோர் திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து கலைந்தனர்.