/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்னாள் வீரர்களுக்கான சார்ந்தோர் சான்று
/
முன்னாள் வீரர்களுக்கான சார்ந்தோர் சான்று
ADDED : மே 11, 2024 05:40 AM
திண்டுக்கல்: முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது. 2024--25 கல்வி ஆண்டில் சான்றினை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
இதை பெற கல்லுாரி படிப்பிற்கான விண்ணப்பப் படிவம் 10, 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் பள்ளி மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சார்ந்தோர் ஆதார் அட்டை, முன்னாள் படைவீரின் அடையாள அட்டை, படைவிலகல் சான்று முழுவதும் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
முன்னாள் படைவீரர்கள்,சார்ந்தோர்கள் முந்தைய கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றிதழை 2024--25-ம் கல்வியாண்டிற்கு பயன்படுத்தக் கூடாது.
முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் கல்லுாரி சேர்வதற்கான சார்ந்தோர் சான்று பெற்று பயன்பெறலாம்.
திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.