/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
படிக்கட்டுகளில் சூடம் ஏற்றுவதால் பக்தர்கள் சிரமம்
/
படிக்கட்டுகளில் சூடம் ஏற்றுவதால் பக்தர்கள் சிரமம்
ADDED : ஏப் 29, 2024 06:10 AM
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு செல்லும் படிப்பாதையில் சூடம் ஏற்றுவதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
பழநி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
படிப்பாதை ஏறிச்சென்று வழிபடுவதால் அதிக நன்மை ஏற்படும் என பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதிக அளவில் படிப்பாதையில் பக்தர்கள் ஏறி செல்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் சிலர் படிப்பாதையில் சூடம் வைத்து மெழுகுவர்த்தி மூலம் ஏற்றி செல்கின்றனர். படிகளில் கற்பூரம் ஏற்றிச் செல்வது பாதையில் பின்னால் வரும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. சிறு குழந்தைகள் முதியவர்கள் கற்பூரம் எரிந்து முடித்த பிறகு சூடான தரையில் கால்களை வைத்து காயமடைகின்றனர். இது குறித்து முறையான விழிப்புணர்வு பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

