/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்

ADDED : மே 21, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம் : வைகாசி விசாகத்தை முன்னிட்டு ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.
இக் கோயிலில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜன. 21 முதல் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே வைகாசி விசாகத்தை முன்னிட்டு தினமும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
மேலும் கோயில் சுற்று கிராமங்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருகின்றனர்.
வரிசையில் காத்திருந்து சுவாமிக்கு தீர்த்தாபிஷேகம் செய்து வருகின்றனர்.