/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
/
பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஏப் 15, 2024 01:34 AM

பழநி : தமிழ் புத்தாண்டு,சஷ்டியை தொடர்ந்து பழநி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அடிவாரம் கிரிவீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால் பக்தர்கள் எளிதாக கிரிவலம் வந்தனர். சுவாமி தரிசனம் செய்ய முருகன் கோயிலில் பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். வின்ச், ரோப்கார் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர்.
சன்னதி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் பாதிப்பினை சந்தித்தனர். அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.
முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் , கலச நீர் அபிஷேகம்,சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இது போல் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பாரவேல் மண்டபம், வெளிபிரகாரத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

