ADDED : மே 06, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வின்ச், ரோப்கார் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை நிழல் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. கிரி வீதியில் டூவீலர்கள் அனுமதி இல்லாததால் சாலைகளில் டூவீலர்களை நிறுத்திச் சென்றனர். எனவே டூ வீலர் ஸ்டாண்ட் அமைக்கப்பட கோரிக்கை விடுத்தனர்.