/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் போலி கைடுகளால் பக்தர்கள் அவதி
/
பழநி கோயிலில் போலி கைடுகளால் பக்தர்கள் அவதி
ADDED : மார் 10, 2025 05:34 AM
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை அடிவாரம் பகுதிகளில் சுற்றித்திரியும் போலி கைடுகள் ஏமாற்றுகின்றனர். இதைக்கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.
பழநி முருகன் கோயிலுக்கு தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். இவர்களைக் குறிவைத்து கைடுகள் என பலர் சுற்றுகின்றனர்.
பழநி கோயில் நிர்வாகம் சார்பில் யாரையும் கைடுகளாக நியமிக்கப்படவில்லை. வெளி மாநில, வெளியூர் நபர்களை கண்டறிந்து போலி கைடுகள் ஏமாற்றுகின்றனர். இதனால் பல பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம் என கூறி பக்தர்களை படிப்பாதை, யானை பாதை வழியாக கோயிலுக்கு வர வலியுறுத்துகின்றனர்.
கோயில் வெளிப்பிரகாரத்தில் நின்று கொண்டு தரிசன வரிசையில் முன்னுரிமையில் செல்லலாம் எனக்கூறி ரூ.500 முதல் பேரம் பேசி ஏமாற்றுகின்றனர்.
இதை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகத்தின் சார்பில் முக்கிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் உதவி மையங்கள் அமைக்க வேண்டும்.
பல மொழிகள் பேசுபவர்கள் நியமிக்க வேண்டும்.
கோயிலில் போலி கைடுகளுக்கு உதவும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.