/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் வெயிலால் தவித்த பக்தர்கள்
/
பழநியில் வெயிலால் தவித்த பக்தர்கள்
ADDED : மார் 10, 2025 05:34 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக வெளிப்பிரகாரத்தில் வெயிலில் காத்திருந்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.
பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். முகூர்த்த நாளான நேற்று புதுமண தம்பதியினர் பலர் மணக்கோலத்தில் கோயிலில் தரிசன செய்ய வந்தனர்.
ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் காத்திருந்தனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
சிலமணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ரூ.10, ரூ.100 தரிசன வரிசையில் பலர் காத்திருந்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.
முதியவர்கள், குழந்தைகள் சிரமம் அடைந்தனர். வெளிப்பிரகாரத்தில் வெயில் காலம் முடியும் வரை பந்தல் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.