ADDED : ஆக 22, 2024 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம் சுற்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டர் பூங்கொடியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர். நிலக்கோட்டைக்கு கலெக்டர் சென்று இருப்பதாக போலீசார் கூறியும் ஏற்காத விவசாயிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து விவசாயிகள் சார்பில் சிலர் மட்டும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமாரிடம் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
விவசாயிகள் கூறுகையில்'' பல ஆண்டுகளாக கண்வலி விதை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.
கண்வலி விதைகளை வாங்கிய நிறுவனம் பணம் தராது மோசடி செய்துவிட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்றனர்.