/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் -- பழநி ரயில் சேவை நீட்டிக்க வலியுறுத்தல்
/
திண்டுக்கல் -- பழநி ரயில் சேவை நீட்டிக்க வலியுறுத்தல்
திண்டுக்கல் -- பழநி ரயில் சேவை நீட்டிக்க வலியுறுத்தல்
திண்டுக்கல் -- பழநி ரயில் சேவை நீட்டிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2024 04:57 AM
ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் --பழநி இடையே ரயில் சேவைகளை நீட்டிக்க ரயில்வே ஆலோசனை குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அக்கரைப்பட்டியில் ரயில்வே ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. தெற்கு ரயில்வே பழநி பிரிவு வணிக ஆய்வாளர் அக்பர்அலி தலைமை வகித்தார். ஸ்டேஷன் மாஸ்டர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கோவிட் நிலைக்கு முன் அக்கரைப்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நின்று சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் யணிகள் ஏற்றிச் செல்லும் வகையில் இயக்குதல், ரயில் முன்பதிவு வசதி ஏற்படுத்துதல், பிளாட்பாரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருதல், பாலக்காடு- பழநி ரயில்களை திண்டுக்கல் வரை நீட்டித்தல், திருச்சி திண்டுக்கல் இடையிலான சேவையை பழநி வரை நீட்டிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்கள் கங்காதரன், அன்புஹரிஹரன், லட்சுமண மணிகண்டன், உமாமகேஸ்வரி பொறுப்பேற்றனர். இவர்களுக்கு வணிக ஆய்வாளர் அக்பர்அலி, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.