/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் கட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
/
திண்டுக்கல் கட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
திண்டுக்கல் கட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
திண்டுக்கல் கட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : மே 15, 2024 05:41 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நாயுடு மஹாலில் அகில இந்திய கட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தேசிய தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட மையத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய தலைவராக பொறியாளர் பவுல்ராஜ், செயலாளராக பிரேம்குமார், பொருளாளராக மோகன் தேர்ந்தெடுக்க பட்டு பதவியேற்றனர்.
மாநில தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார். மாநில டிரஸ்டி திருசங்கு, மாநில செயலாளர் வெங்கடேசன் பங்கேற்றனர். புதிய உறுப்பினர்களாக 17 பேர் சங்கத்தில் இணைந்தனர்.
மாவட்ட மைய முன்னாள் பொறியாளர்கள் சங்க தலைவர்கள் தாண்டவகிருஷ்ணன், ஜனகர், அப்துல்காதர், தர்மலிங்கம், ஏ.பி.சி. பாலிடெக்னிக் முதல்வர் மணிவண்ணன், பொறியாளர்கள் பாலச்சந்திரன், மீனாட்சி சுந்தரம், உதயகுமார், திண்டுக்கல் நகர வங்கி முன்னாள் தலைவர் வீரமார்பன் பிரேம், தேவர் குழு மெட்டல்ஸ் உரிமையாளர் முருகேசன், பாரத் பில்டர்ஸ் உரிமையாளர் ஸ்ரீதர், பி.டி.கே. ரவிச்சந்திரன், கிளாசிக் எலக்ட்ரிகல்ஸ் பைக்ஸ் உரிமையாளர் ரூபன், எஸ்.கே.கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் மோகன், ஸ்ரீகுமார் கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் சந்திரகுமார், ஹைடெக் கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் மணிகண்டன், நடேசன் அண்கோ உரிமையாளர் நடேசன்சரவணன், இந்திய ராணுவ பிரிவின் பொறியாளர் குமரன், எஸ்.கே.கலர் டிரஸ் உரிமையாளர் செந்தில்குமார், நியூ இந்துஸ்தான் ஸ்டீல் உரிமையாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.செயலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

