/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
10ம் வகுப்பு தேர்வில் 93.32 சதவீத மாணவர்கள் தேர்ச்சி 22வது இடத்தில் திண்டுக்கல்

ADDED : மே 11, 2024 05:36 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.32 சதவீத மாணவர்கள் தேர்ச்சிஅடைந்தனர்.
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் பழநி, திண்டுக்கல் கல்வி மாவட்டங்கள் உள்ளன.
மாவட்டம் முழுவதும் 113 மையங்கள் அமைக்கப்பட்டு 352 பள்ளிகளைச் சேர்ந்த 12,098 மாணவர்கள், 12,567 மாணவிகள் என மொத்தம் 24,665 பேர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 10,818 மாணவர்கள், 11,952 மாணவிகள் என மொத்தம் 22,770 பேர் தேர்ச்சிப் பெற்றனர். மாணவர்கள் 89.42 சதவீதம், மாணவிகள் 95.11 என மொத்தம் 92.32 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றனர். இதன் மூலம் மாநில அளவிலான தர வரிசைப் பட்டயிலில் திண்டுக்கல் மாவட்டம் 22வது இடத்தைப் பெற்றது.
2023ல் 19வது இடம் பெற்றது. ஆங்கில பாடத்தில் 6 பேரும்,கணிதத்தில் 370, அறிவியலில் 86, சமூக அறிவியலில் 49 என மொத்தம் 511 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தனர். அரசு பள்ளிகள் 40,பகுதி நேர உதவி பெறும் பள்ளி 9,மெட்ரிக் பள்ளிகள் 59 என 108 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.