ADDED : ஜூலை 05, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி மாநகர நல அலுவலராக டாக்டர் பரிதாவாணி பணியாற்றி வந்தார். இவர் அவருக்கு கீழ் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களை பணி செய்யவிடாமலும், அநாகரீகமாக திட்டுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் இளமதியிடம் புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரிந்து வரும் பரிதாவாணி, நகராட்சி நிர்வாகத் துறை மாநகர் நல அலுவலர் பணியிடத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பொது சுகாதாரத் துறையின் கீழ் பணியிடம் விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.