/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் ரோடு பணியால் இடையூறு; பயணிகள் அவதி
/
'கொடை' யில் ரோடு பணியால் இடையூறு; பயணிகள் அவதி
ADDED : மார் 29, 2024 06:14 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் பெருமாள்மலை ரோட்டில் சீரமைப்பு பணி நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதியடைந்தனர்.
இந்த ரோட்டில் உள்ள டைகர் சோலை பகுதியில் அடிக்கடி ரோடு சேதமடைவதை தடுக்க நெடுஞ்சாலை ஆண்டுதோறும் பல்வேறு யுக்திகளை கையாண்டு தோல்வியில் முடிகிறது. தற்போது 2 கி.மீ., அளவிற்கு ஆங்காங்கே பள்ளங்களை தோண்டி அதில் காங்கிரீட் அமைக்கும் நுாதன முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 8 க்கு மேற்பட்ட இடங்களில் குறுகிய ரோட்டில் ஒரு புறமாக பள்ளங்களை தோண்டி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாமல் போக்குவரத்தும் பாதிக்கிறது. இதனால் பயணிகள் அவதி அடைகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ,'' பேவர் பிளாக் அமைத்த பகுதியில் ரோடு பள்ளமாக இருப்பதால் இதை தவிர்க்க 2 கி.மீ., துாரம் காங்கிரீட் அமைக்கும் பணிக்காக ரோடு தோண்டப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை வருவதால் வெர்ட் மிக்ஸ் அமைத்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இப்பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவுறும்'' என்றார்.

