/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலர் கண்காட்சியில்- உள்ளூர் கலைஞர்கள் முக்கியத்துவம் அளிக்க மாவட்டம் நிர்வாகம் முன்னேற்பாடு

ADDED : ஏப் 26, 2024 12:38 AM
திண்டுக்கல் : கொடைக்கானலில் மே மாதத்தில் நடக்கும் மலர் கண்காட்சி கலை நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது.
கொடைக்கானலில் கோடை மலர்கண்காட்சி 10 நாட்கள் நடக்கும் நிலையில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இதில் முற்றிலுமாக உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள இசை , நடன கலைஞர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் உட்பட பலருக்கும் வாய்ப்பளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கல்லுாரி மாணவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்கும் மேடையாக மாற்றவும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
வெளி மாவட்டங்களிலிருந்து வந்து பங்கேற்றாலும், உள்ளூர் கலைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் தங்களின் திறமைகளை நிரூபிக்க தலா ஒரு மணி நேரம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கல்லுாரிகளில் எடுத்துக்கூறி மாணவர்களை கலந்து கொள்ள வைக்க உள்ளனர். இதோடு, மாணவர்களின் போக்குவரத்து செலவினையும் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இன்னும் மலர் கண்காட்சிக்கான தேதி அறிவிக்காத நிலையில், முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு கண்காட்சி தேதியினை அறிவிக்க உள்ளனர்.