/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் கிணற்றை துார்வார இடையூறு ;அரசு நிலத்தை சர்வே செய்த அதிகாரிகள்

ADDED : ஜூன் 08, 2024 05:53 AM
பழநி : பழநி கோதைமங்கலம் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் கிணற்றை துார்வாரி ஆழத்தை அதிகப்படுத்த முயன்ற போது தனிநபர் இடையூறு ஏற்படுத்தியதால் வருவாய் , உள்ளாட்சித் துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
பழநி கோதைமங்கலம் ஊராட்சி பகுதிகளில் உள்ள 700 க்கு மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் பெரியஆவுடையார் கோயில் ரோடு அருகே கிணறு உள்ளது. சில மாதங்களாக கிணற்றின் நீர் குறைந்தது. இதனால் ஊராட்சி சார்பில் கிணற்றை துார்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் வரத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இதற்கு கிணற்றின் அருகே உள்ள விளை நிலத்தின் விவசாயி பணிகளை செய்யவிடாது இடையூறு ஏற்படுத்துவதாக அதிகாரிகள் கூறினர்.
கிணற்றின் இடம் அரசுக்கு சொந்தமானது என கண்டறிய ஊராட்சி ,வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டது. இதில் கிணறு ,கிணற்றுக்கு அருகே உள்ள பகுதிகள் அரசுக்கு சொந்தமான நிலம் என கண்டறியப்பட்டது.
விவசாயிகள் தனிநபர் ஆக்கிரமிப்பால் விளைபொருட்களை கொண்டு வர முடியாமல் சிரமம் ஏற்படுகிறது . வைக்கோல்களை விற்க முடியாமல் நிலத்திலே தீ வைத்து எரித்து வருகிறோம் என குற்றம் சாட்டினர்.